பல்லாவரம் அருகே நண்பர்களுடன் கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி

பல்லாவரம் அருகே கல்லூரிக்கு செல்வதாக கூறி நண்பர்களுடன் கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி;

Update: 2021-07-07 01:00 GMT

தண்ணீரில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்த  நவீன்குமார்.

பல்லாவரம் அருகே கல்குட்டையில் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் பொன்னியம்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் மனோகரன். இவருடைய மகன் நவீன்குமார் (21) அப்பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரிக்கு செல்லவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு நவீன் தனது நண்பர்கள் 10 பேருடன் பல்லாவரம் அருகே சங்கர் நகர் காவல் நிலையம் பின்புறம் மலை பகுதியில் உள்ள கல்குட்டைக்கு குளிக்க சென்றுள்ளார். இதில் நீச்சல் தெரிந்தும் நவீன் ஆழமான பகுதிக்கு சென்றதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்க நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கண்ட சக நண்பர்கள் அவரை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் நண்பர்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News