சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டி-பார்ம் 4ம் ஆண்டு படித்து வருபவர் பவித்ரா(19), இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர்.
ஜமீன் பல்லாவரத்தில் தனியார் விடுதியில் அறை எடுத்து இரண்டு பெண்களுடன் தங்கி வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உடலை கைப்பற்றிய பல்லாவரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இறப்பதற்கு முன்னதாக பெற்றோருக்கு வாட்ஸாப் மூலமாக தன்னால் படிக்க முடியவில்லை, நீங்கள் பணம் கட்டி என்னால் மிகவும் கஷ்டபடுவதாகவும், அதனால் தான் உங்களை விட்டு செல்வதாக குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.