சசிகலா பொறுப்பேற்க, தாம்பரம் - அடையாறு போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க, தாம்பரம் - அடையாறு வரை போஸ்டர்கள் ஒட்டி அதிமுகவினர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.;

Update: 2021-07-28 04:30 GMT

தாம்பரம் முதல் அடையாறு வரை ஒட்டிய போஸ்டர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை அதிமுக சார்பில், சசிகலாவுக்கு  தாம்பரம் முதல் அடையாறு வரை போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

அதிமுகவின் நிரந்தர பொது செயலாளராக சசிகலா மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என அதிமுகவினர் பலர் வலியுத வருகின்றனர். 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை அதிமுக சார்பில், சசிகலாவுக்கு தாம்பரம் முதல் அடையாறு வரை போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த பாேஸ்டரில், சபதம் ஏற்க நரிகளின் தந்திரத்தை முறியடித்து சிக்கலை சிதறடித்து வருகிறார். சிங்கததலைவி அஇஅதிமுக.,வின் கழக நிரந்தர பொது செயலாளராக பதிவு ஏற்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை தாம்பரத்தில் இருந்து அடையாறு வரை அதிமுக நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டிதுள்ளனர். இது அதிமுக நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News