அனகாபுத்தூரில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக பொதுமக்கள் புகார்
Complaint In Tamil - அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள்.;
Complaint In Tamil - சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பேருந்து நிலையம் மற்றும் பம்மல் போலீஸ் பூத் அருகில் உள்ள பாரிலும் சட்டவிரோதமாக, பட்டப்பகலிலேயே மது விற்பனை படு ஜோராக நடைபெறுவதாக மக்கள் புகார் கூறுகிறார்கள்.
அரசு நிர்ணயித்த நேரத்தில் மட்டும் தான் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்றில்லாமல் 24 மணி நேரமும் பாரை திறந்து வைத்துக் கொண்டு விற்பனை செய்கிறாரக்ள்.
இது போன்ற சட்டவிரோத மது விற்பனையை தடுத்து நிறுத்தாமல் கைகட்டி, வாய்மூடி வேடிக்கை பார்க்கும் சங்கர் நகர் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டவிரோத மதுவிற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வைக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2