குரோம்பேட்டை அருகே அர்ச்சகரின் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்

குரோம்பேட்டை அருகே மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை கொட்டி எரித்ததால் அருகில் நின்று கொண்டிருந்த அர்ச்சகரின் கார் தீப்பிடித்து எரிந்து சேதமானது.;

Update: 2022-02-03 04:30 GMT

தீப்பிடித்து எரிந்து சேதமான கார்.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராகவன் (44) குமரகுன்றத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு ராகவன் தனது காரில் வந்துள்ளார்.

அப்போது தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் காரின் அருகே குப்பைகளை எரித்துள்ளனர். அப்போது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன் பகுதி திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கி முழுவதுமாக சேதமடைந்தது.

இதனைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News