குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகால் மூடல்: 13ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு
குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகால் மூடப்பட்டது. 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
சென்னை குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகாலில் 240 ஊழியர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் கடை மூடப்பட்டது. சுகாதார துறை சார்பில் கடை முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.