வெள்ளத்தில் மூழ்கிய பம்மல் சாலைகள் - முடங்கியது மக்களின் இயல்பு வாழ்க்கை
பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட பிரசாத் நகரில், கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் முழ்கின; மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது.;
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சி பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு பிரசாந்த் நகர் பகுதியில், விடிய விடிய பெய்த கனமழையால் அப்பகுதியில் வெள்ளநீர் புகுந்து, சாலைகள் முழுவதும் முழ்கிய நிலையில் உள்ளன. இதனால், பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து , தேங்கிய வெள்ளநீருடன் கழிவு நீர் கலந்துள்ளதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே தேங்கிய நீரை உடனடியாக அப்புறபடுத்த பம்மல் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.