பல்லாவரம்: தவறான நண்பர்களால் கஞ்சா வழக்கில் கைதான பேட்மின்டன் கோச்!
கூடா நட்பு கேடாய் அமையும் என்பதற்கேற்ப கஞ்சா வழக்கில் நண்பர்களால் பேட்மின்டன் கோச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, டெம்பிள் டவுன் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயசூர்யா(22). பேட்மின்டன் கோச்சாக இருந்து வருகிறார்.
இவரது நண்பர்கள் பிரகாஷ்ராஜ்(21), விக்கி(எ) எழிலரசன், நாகராஜ் ஆகியோர் இவருடன் தங்கியிருந்தனர். இதில் எழிலரசன் மற்றும் நாகராஜ் ஆகியோர் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வீட்டில் வைத்து பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் சேர்ந்து பொட்டலம் போட்டு விற்பனை செய்து வந்தனர்.
இந்த தகவலறிந்த சங்கர் நகர் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். நான்கு பேர் மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கூடா நட்பு கேடாய் அமையும் என்பார்கள் அது போல் தவறான நண்பர்களின் சகவாசத்தால் பேட்மின்டன் கோச் கஞ்சா வழக்கில் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.