எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்லாவரம் நகர அதிமுக சார்பில் வரவேற்பு

சேலம் சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்லாவரம் நகர அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-11-25 09:30 GMT

சேலத்திற்கு புறப்பட்ட, முன்னாள்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பல்லாவரம் நகர அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து,  சேலத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புறப்பட்டு சென்றார். முன்னதாக, பல்லாவரம் நகர அதிமுக சார்பில்,  பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதில், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராசேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், முன்னாள்  நகரமன்ற துணைத் தலைவர் ஜெய்பிரகாஷ் உட்பட அதிமுக  நிர்வாகிகள் ஏராளமானோர் வழிநெடுங்கிலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News