அனகாபுத்தூரில் தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் திறப்பு விழா
அனகாபுத்தூரில் தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் திறப்பு விழா நடைபெற்றது.;
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காயிதேமில்லத் நகர் பகுதியில் தமிழக மாற்றுத் திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் திறப்பு விழா, மாநில செயலாளர் பாரூக்பாஷா தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் வழக்கறிஞர் சங்க தலைவர் ரங்கராஜன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
பின்னர் தலைவர் ரங்கராஜன் பேசுகையில் இது சாதாரணமான தனிமனித செயல் அல்ல இது ஒரு ஒட்டுமொத்த மாற்றுத் திறனாளிகளின் செயல்பாடு எனவும், வழக்கரிஞர் தலைவர் எனற முறையில் உங்களுக்கு எந்த நேரத்திலும் இலவசமாக செய்ய கடமைபட்டிருக்கின்றேன் என கூறினார்.
இதில் மக்கள் சேவகர் இ.எம்.பாபு மற்றும் சங்க நிர்வாகிகள் ஆனந்த், விஜயலஷ்மி, சுடர் ஆனந்த், தங்கமணி, அருள்ராஜ், முத்துகிருஷ்ணன் உட்பட ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்த்கியாளர்களை சந்தித்து பேசிய மாநில செயலாளர் பாரூக்பாஷா கூறுகையில் நாங்கள் மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாடு சட்ட பயின்ற மாணவர்கள் இணைந்து இந்த தமிழக மாற்றுத் திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் துவக்கி உள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் எங்களுடைய தொலைபேசி எண்கள் மற்று மின்னஞ்சல் முலமாக புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் இது முற்றிலும் இலவசமாக செய்வதாகவும் கூறினார்.