300 பேர் 33 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்
பழைய பல்லாவரத்தில் ஈசன் சிலம்பாலயாவின் சார்பில் 300 வீரர், வீராங்கனைகள், 33 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் பழைய பல்லாவரம் அம்பேத்கர் விளையாட்டு திடலில் 33 நிமிடம் சிலம்பம் சுற்றி உலக சாதனை நடத்தும் நிகழ்ச்சி ஈசன் சிலம்பாலயா நிறுவனர் அருண்கேசவன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், நடிகர் ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இதில் 300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தொடர்ந்து 33 நிமிடம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். இதற்கான சான்றிதழ்களும், பதக்கங்களும் பெற்றனர்.
நிகழ்ச்சியில் முன்னால் நகரமன்ற துனைத் தலைவர் ஜெய்பிரகாஷ், முன்னால் நகரமன்ற உறுப்பினர் மனோகரன், அம்மணி கல்யாணசுந்தரம், அன்னபூரணி நீலகண்டன், 17 வார்டு துணைச் செயலாளர் பரமேஸ்வரன், எம்.கே.என் சிலம்பக்கலை நிறுவனர் மாங்காளி உட்பட பலர் கலந்துய் கொண்டனர்.
இது குறித்து ஈசன் சிலம்பாலயா நிறுவனர் அருண்கேசவன் கூறுகையில் பாரம்பரியமான சிலம்பகலையை அழியாமல் பாதுகாக்கவும், மக்களுக்கு சிலம்பக்கலை குறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேலும் 33 நிமிட சிலம்பம் சுற்றி செய்த உலக சாதனையை, விரைவில் நாங்களே முறிடிப்போம் என்றார்.