இந்து மகா சபா, சந்த் மஹா சபா சார்பில் சம்பிரதாய நாம சங்கீர்த்தன விழா

பல்லாவரத்தில் அகில பாரத இந்து மகா சபா மற்றும் சந்த் மஹா சபா இணைந்து நடத்திய சம்பிரதாய நாம சங்கீர்த்தன விழா நடைபெற்றது.;

Update: 2021-09-11 08:09 GMT

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா மற்றும் சந்த் மஹா சபா இணைந்து நடத்திய சம்பிரதாய நாம சங்கீர்த்தன விழா. 

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த பம்மலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா மற்றும் சந்த் மஹா சபா இணைந்து நடத்திய சம்பிரதாய நாம சங்கீர்த்தன விழா இன்று காலை நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சந்த் மகா சபா பம்மல் கிளை துவக்க விழாவை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா மற்றும் சந்த் மகா சபா இணைந்து சேரன்மாதேவி அலைகடல் வெங்கட்ராம பாகவதர் நினைவாக சென்னை பம்மலில் உள்ள சங்கரா நகரில் சம்பிரதாய நாம சங்கீர்த்தன ஆன்மீக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாகவதர் ரத்தினம் எச். பால வெங்கடகிருஷ்ண பாகவதர் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு, விநாயகர் கீர்த்தனைகளை பாடினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் சந்த் மஹா சபா மாநில தலைவர் ஸ்ரீராம் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

Tags:    

Similar News