பல்லாவரம்: விதிகளை மீறி காற்றாடி விடும் இளைஞர்கள், கழுத்து அறுபடும் வாகன ஓட்டிகள்
இளைஞர்கள் மாஞ்சா நூல் போட்ட காற்றாடி விடுவதால், அறுந்து செல்லும் மாஞ்சா நூல் வாகன ஓட்டிகளின் கழுத்தை பதம் பார்க்கிறது
ஊரடங்கு காலத்தில் பொழுதை கழிப்பதற்காக சில இளைஞர்கள் காற்றாடி விடுகின்றனர். அதனை விட பயன்படுத்தும் நூலை மாஞ்சா போட்டு விடுவதால் அறுந்து செல்லும் காற்றாடியின் மாஞ்சா நூல் வாகன ஓட்டிகளின் கழுத்தை அறுத்து விடுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் வெங்கடஸ்வரன்(30) என்பவர் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் ஒட்டியம்பாக்கத்தில் இருந்து திருமுடிவாக்கம் செல்வதற்காக வந்து கொண்டிருந்த போது பல்லாவரம் மேம்பாலத்திற்கு கீழ் ரேடியல் சாலையில் அறுந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று வெங்கடேஸ்வரன் கழுத்தை பதம் பார்த்தது.
கழுத்து அறுபட்ட இளைஞர் வெங்கடேஸ்வரன், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காற்றாடி விடும் நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.