செங்கல்பட்டு 3வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டா போட்டி
செங்கல்பட்டு 3வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 12 பெண்கள் போட்டியிடுவது கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.;
வருகின்ற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 3வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு புனித தோமையார் மலை பகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஜெர்லின்செல்வகுமாரி, பாரதி, அம்சவேணி, ஆகிய மூன்றுபேர் போட்டியிடுகின்றனர். பாரதீய ஜனதா கட்சி சார்பில், பிரபாகுமாரி, சுமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆரோக்கியஜனிட்டா, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தேவி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பிந்து, பாட்டாளிமக்கள் கட்சி சார்பில் காயத்திரி, சுயேட்சையாக பிரித்திகா ஆய்கியோர் போட்டியிடுகின்றனர்.