சென்னை பல்லாவரம் பகுதியில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்தவர் கைது

சென்னை பல்லாவரம் பகுதியில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-04-10 06:15 GMT

கைது செய்யப்பட்ட ஞானமூர்த்தி.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், வ.உ.சி.நகர், பாலாஜி தெரு விரிவாக்க பகுதியில் வசித்து வருபவர் சிவசண்முகம்(51), கட்டுமான நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
இவர் கடந்த மார்ச மாதம் 16ம் தேதி கொல்கத்தா, டார்ஜிலிங் பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு 23ம் தேதி வீட்டிற்கு வந்து வீட்டின் முன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பின் பக்க கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் உள்ள பீரோவில்  வைத்து இருந்து 34 சவரன் தங்க நகை, 100000 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள சி.சி.சி.வி. காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையனை கைது செய்தனர்.
விசாரணையில் அவரது வீட்டில் கொள்ளையடித்தவர்  அதே பகுதியை சேர்ந்த ஞானமூர்த்தி(40), என்பதும் கடந்த 10 ஆண்டுகளாக இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வருவதும் தெரியவந்தது. மடிப்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் ஞானமூர்த்தி மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 86 சவரன் தங்க நகைகள், 10000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News