பல்லாவரத்தில் 24ஆம் ஆண்டு ஐயப்ப 18 ஆம் படிபூஜை திருவிழா

ஜமீன் பல்லாவரம் பச்சையம்மன் ஆலயம் அருகே 24ஆம் ஆண்டு ஐயப்ப 18 ஆம் படிபூஜை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

Update: 2021-12-21 03:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம், ஜமீன் பல்லாவரம் பச்சையம்மன் ஆலயம் அருகே ஓவ்வொரு ஆண்டும் ஐயப்ப பூஜை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு 24 வது ஆண்டை முன்னிட்டு ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயில் நிர்வாகிகள் விநாயகம், ராஜா தலைமையில் ஐயப்ப பூஜையை  கொண்டாடினர்.

மிக பிரம்மாண்டமாக ஐயப்ப பூஜையில் 18 படிகள் அமைக்கப்ட்டு ஐயப்ப பக்தர்கள் பக்தி பாடல் பாடி 18 ஆம் படி பூஜை செய்து ஐயப்ப பூஜை திருவிழா கொண்டாடபட்டது.

ஐயப்ப பூஜையில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .

Tags:    

Similar News