ஊராட்சி தலைவர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு கோரி சுயட்சை வேட்பாளர் சாலை மறியல்

அகரம்தென் ஊராட்சி தலைவர் பதவிக்கு மறுவாக்கு பதிவு நடத்த கோரி சுயட்சை வேட்பாளர் ஊராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல்.;

Update: 2021-10-14 08:30 GMT

அகரம்தென் ஊராட்சி தலைவர் பதவிக்கு மறுவாக்கு பதிவு நடத்த கோரி சுயட்சை வேட்பாளர் ஊராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல்.

செஙக்ல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் தென் ஊராட்சிக்கான தலைவர் பதவிக்கு 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆதிகேசன் இருவருக்குமிடையில் கடும் போட்டி நிலைவி வந்த நிலையில் திமுக வேட்பாளர் ஜகதீஸ்வரன் 3,295 வாக்குகள் பெற்று வெற்றிபட்டதாக தெரிவித்தனர்.

இதில் வாக்கு எண்ணும் பணியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் ஒருபட்சமாக தேர்தல் அதிகாரி செயல்பட்டதாகவும் சுயட்சை வேட்பாளர் ஆதிகேசவன் அவரின் முகவர்கள் நேற்று வாக்கு சாவடி மையத்தின் உள்ளே தர்ணா ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலிசார் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து மறு வாக்குபதிவு நடத்த கோரியும் ஒரு பட்சமாக செயல்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவரை கைது செய்ய கோரியும் ஊராட்சி அலுவலகம் முன்பு சுயேட்சை வேட்பாளர் ஆதிகேசவன் தனக்கு ஓட்டு அளித்த அப்பகுதி மக்களுடனும் மற்றும் அகரம்தென் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களுடன் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் ஏராளமான போலிசார் குவிக்கபட்டதால் பதற்றம் நிலைவி வருகிறது.மேலும் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் திருப்பி விடபட்டன.

Tags:    

Similar News