தடையை மீறி விநாயகர் ஊர்வலம் சென்ற இந்து திராவிட மக்கள் கட்சியினர்

குரோம்பேட்டையில் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் எடுத்து சென்று குளத்தில் கரைத்த இந்து திராவிட மக்கள் கட்சியினர்

Update: 2021-09-13 11:30 GMT

விநாயகர் சிலைகளுடன் திருநீர்மலை கோயில் குளத்தில் இந்து திராவிட மக்கள் கட்சியினர் 

கொரொனா பரவல் காரணமாக தமிழகத்தில் இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திவிழா இரண்டாவது ஆண்டாக, கொண்டாட தமிழக அரசு தடைவித்தித்துள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை நாகப்பா நகர் பகுதியில் இந்து திராவிட மக்கள் கட்சியின் நிறுவனர் ரமேஷ்பாபு தலைமையில் அவரது இல்லத்தில் விநாயகர் சிலைகளுக்கு வழிபாடு செய்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

பின்னர் விநாயகர் சிலைகள் பெரிய வாகனங்களில் வைக்க அனுமதி இல்லாததால், தடையை மீறி சிலைகளை கரைப்பதற்கு இருசக்கர வாகனத்தில் வைத்து நாகப்பா நகரில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள திருநீர்மலை கோயில் குளத்தில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின் இந்து திராவிட மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் அவர்களுடன் சென்றனர்.

Tags:    

Similar News