பல்லாவரம், பம்மலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை அதிமுகவினர் பல்லாவரம், பம்மலில் அவரது திரு உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.;
செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்டலம்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்டலம்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் இன்று காலை 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயலலிதாவின் உருப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதன்படி பல்லாவரத்தில் நகர செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் தலைமையில் ஜெயலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் பம்மல் நகர பொருளாளர் அப்பு வெங்கடேஷ் ஏற்பாட்டில் பம்மலில் ஆயிரம் பேருக்கு அன்னாதானம் மற்று புடவைகள் வழங்கப்பட்டன. இதேபோல் சிட்லபாக்கம், அனகாபுத்தூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.