பல்லாவரத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கிய 5 பேர் கைது: சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தயாள் அதிரடி...!
பல்லாவரம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய 5 பேரை அதிரடியாக பல்லாவரம் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தினர்.;
சென்னை பல்லாவரம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய 5 பேரை கைது செய்து, 8½கிலோ கஞ்சாவை பறிமுதல்.செய்த பல்லாவரம் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர்.
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் வைத்தியப்பிரிவு சாலையில் பிளம்பர் வேலை செய்யும் ராஜா (38), என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆய்வாளர் தயாள் தலைமையிலான போலீசார் ராஜாவின் வீட்டை அதிரடியாக சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் 8½ கிலோ கஞ்சா மற்றும் அதனை அளவு பொட்டலம் போட வைத்திருந்த எடை மிஷின் ஆகியவற்றை அதிரடியாக காவல்துறையினர் கைப்பற்றி, பறிமுதல் செய்தனர். மேலும் ராஜா அவரது நண்பர் மூலம் ஒரிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கிவந்து நண்பர்கள் மூலம் பொட்டலம் போட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இவருடன் தொடர்பில் இருந்த பல்லாவரத்தை சேர்ந்த ஹசன் (21), ஆகாஷ் (22), கோகுல் (21), திவாகர் (32) உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து பல்லாவரம் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் கைது செய்தனர்.