குரோம்பேட்டை அருகே மரக்கடையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
குரோம்பேட்டை அருகே மின்கசிவு காரணமாக மரக்கடையில் தீவிபத்து பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்;
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை அடுத்த நாகல்கேனியில் மரக்கடை நடத்தி வருபவர் பிரபு (50). நேற்று இரவு வழக்கம் போல் நேற்று இரவு கடையினை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதிகாலை 2 மணி அளவில் கடையில் இருந்து தீ பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சமபவ இடத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் கடைக்குள் இருந்த மர பிளைவுட்கள் மற்று இயந்திரஙகள் தீயில் எரிந்து சேதமானது இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய் இருக்கலாம் என்று உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இது குறித்து குரோம்பேட்டை போலிசார் நடத்திய முதற்கட்ட விசாரனையில் மின்கசிவு காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.