குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே பழைய வாகனங்களில் கொளுந்து விட்டு தீ எரிந்ததால் பரபரப்பு

சென்னை குரோம்பேட்டையில் ரயில் நிலையம் அருகே காலி இடத்தில் பழைய வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-06-09 06:15 GMT

சென்னை குரோம்பேட்டை ரயில்நிலையம் அருகே காலி இடத்தில் கொளுந்து விட்டு எரியும் தீ.

சென்னை குரோம்பேட்டையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையம் மற்றும், பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ரயில்நிலையம் அருகே, காலி இடம் உள்ளது. இந்த காலி இடத்தில் கேட்பாரற்று கிடந்த பழைய வாகனங்கள் நிறுத்தப்ப்ட்டு இருந்தன. இந்த வாகனங்கள் நீண்ட நாட்களாகவே இந்த காலி இடத்தில் திறந்தவெளி கிடங்கு போல பயன்படுத்தி போட்டு வைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த பழைய வாகனங்களில் திடீரென தீப்பிடித்து, கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனை பார்த்த அருகில் ரயில் நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த ரயில்வேத்துறை அதிகாரிகள் மற்று பயணிகள் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து, சிலர் தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

இதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கொளுந்து விட்டு எரிந்தன் தீயை அக்கம்பக்கம் பரவாமல் துரிதமாக தடுத்து அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் நிகழாமல் அதிர்ஷ்டவசமாக  தவிர்க்கப்பட்டது. காலி இடத்தில் வாகனங்களில் தீப்பற்றியது எப்படி? யாராவது மர்ம ஆசாமிகள் கை வரிசையா? என காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 

Tags:    

Similar News