கொரோனா குறைந்துள்ளது என்கிற அலட்சியம் வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர்
50 சதவீகிதம் கொரொனா குறைந்துள்ளதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.;
குரோம்பேட்டையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்த காட்சி.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்று அங்கு அமைக்கபட்டுள்ள 100 தற்காலிக ஆக்சிஜன் பெட் மையத்தினை ஆய்வு செய்தாா். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் புதியதாக அமைக்கபட்டுள்ள 100 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்ட 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிக்கிசை மையம், நாளை மறுநாள முதல் செயல்பட தொடங்கும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று 50 சதவீகிதம் குறைந்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகள் போதிய அளவு உள்ளன.
அதுபோல் தமிழகம் முழுவதும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் காரணமாக 458 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அதற்கு கொரோனா தான் காரணமா அல்லது வேறு காரணமா? என்று மருத்துவ நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள் என்ற கூறினார்.