பல்லாவரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
பல்லாவரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியின் மேல். ஆட்டோ வைத்து நூதன முறையில் மனித நேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகே செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் மணிநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மனிநேய மக்கள் கட்சியின் மாநில பொதுசெயலாளர் அப்துல்சமது மற்றும் துணை பொதுசெயலாளர் தாம்பரம் யாக்கூப் கலந்து கொண்டு கண்ட உரையாற்றினர். இதில் மணிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் எனஎராளமனோர் கலந்து கொண்டு கண்டன பாதாகைகள் ஏந்தியவாறு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக பம்மல் ஜமாலபேலஸ் அருகே மாட்டு வடியின் மேல் ஆட்டோவை வைத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வை கண்டிக்கு வகையில் பல்லாவரம் அம்பேத்கர் சிலை வரை சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.