மாநகராட்சி தேர்தலில் இந்திய தேசிய லீக் கட்சி : திமுக கூட்டணிக்கு ஆதரவு
மாநகராட்சி தேர்தலில் இந்திய தேசிய லீக் கட்சி. திமுக தலைமையிலான ஜனனாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.;
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரதில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நூர்மொஹமத் மற்றும் நூர்ஜஹான் ஆகியோரின் திருமண விழாவிற்க்கு இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷிர் அஹமது கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பஷிர் மொஹமது மாநகராட்சி தேர்தல்களில் இந்திய தேசிய லீக் கட்சி முழுமையாக திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான ஜனனாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தருகிறது, தமிழகம் முழுவதும் இருக்ககூடிய சிறுபான்மை முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்றினைத்து வாக்களித்து வெற்றி பெற செய்வேம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.