கொரோனா ஊரடங்கு எதிரொலி: ஏலச்சீட்டு நடத்தியவர் தற்கொலை

ஏலச்சீட்டு நடத்தியவர் அரளி விதையை அறைத்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.;

Update: 2021-05-17 11:25 GMT

தற்கொலை செய்துகொண்ட மருகன் வீடு.

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் சென்ட்ரல் பாங்க் காலனியில் வசித்து வந்தவர் முருகன்(45). இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர் ஐந்து ஏலச்சீட்டுகள் நடத்தியுள்ளார். 5 லட்சம் ரூபாயிலிருந்து, 50 லட்சம் ரூபாய் வரை பல குரூப்கள் ஏலச்சீட்டு நடத்தி வந்தாக கூறப்படுகிறது.2020 ஆம் ஆண்டு கொரானா வைரஸ் முதல் அலை ஊரடங்கு காலத்திலிருந்து,இவருடைய ஏலச்சீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. ஊரடங்கை காரணம் காட்டி, சீட்டு ஏலம் எடுத்து இவரிடம் பணம் வாங்கிய பலா், இவருக்கு சீட்டு பணம் கட்டவில்லை. ஆனால் இவா் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தினா். அதோடு குரோம்பேட்டை போலீசிலும் சிலா் புகாா் கொடுத்தனா். இதையடுத்து முருகன் வட்டிக்கு கடன் வாங்கி, புகாா் கொடுத்தவா்களுக்கு பணம் கொடுத்து சமாளித்தாா்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை, ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இப்போதும் சீட்டு பணம் வசூலாகவில்லை. ஆனால் சீட்டு எடுத்தவா்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனா். பணம் கொடுக்கவில்லை என்றால் போலீசில் புகாா் கொடுப்போம் என்று மிரட்டினதாகக்கூறப்படுகிறது. அதோடு ஏற்கனவே வட்டிக்கு பணம் கொடுத்தவா்களும் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனா்.

இதனால் கடும் நெருக்கடியில் சிக்கித்தவித்த முருகன், தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாா். நேற்றிரவு மாடிக்கு சென்று அரளி விதைகளை அரைத்து கலக்கிகுடித்துவிட்டு, மனைவிக்கு ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துவந்து கொடுத்தாா். அதே நேரத்தில் முருகன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து அதிா்ச்சியடைந்த முருகனின் மனைவி, அரளி விதை கரைசலை குடிக்காமல், முருகனை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினாா். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து எடுத்து சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். குரோம்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News