சென்னை எம்ஐடி கல்லூரியில்மாணவ, மாணவிகள் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா பாதித்த மாணவ,மாணவிகளை கல்லூரி வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது;
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை எம்ஐடி தொழில்நுட்ப கல்லூரியில் 1,417 மாணவா்கள் படிக்கின்றனா்.அவா்கள் அந்த வளாகத்தில் உள்ள மாணவா்கள் விடுதியில் தங்கியிருக்கின்றனா்.
அந்த விடுதியில் தங்கியிருந்த மாணவா்களில் சிலருக்கு கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறையினா்,குரோம்பேட்டை எம்ஐடி விடுதிக்கு வந்து,1,417 மாணவா்களுக்கும் RT-PCR பரிசோதனை செய்தனா்.அதற்கான முடிவு இன்று வந்தது. அதில் 47 மாணவா்கள்,6 மாணவிகள் மொத்தம் 53 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் சில மாணவ,மாணவிகளின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வராமல் உள்ளது. இந்த முடிவுகளும் வந்தால், பாதிக்கப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து அதிா்ச்சியடைந்த மாவட்ட சுகாதாரத்துறையினா், பாதிக்கப்பட்ட 53 மாணவ,மாணவிகளையும், அதே வளாகத்திற்குள் உள்ள மற்றொரு கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்துள்ளனா்.அங்கு பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.அதோடு மாவட்ட சுகாதாரத்துறையின் மருத்துவ குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.இதற்கிடையே நேற்றுமேலும் 11 மாணவா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு.அவா்களும் தனிமைப்படுத்தி சிகிச்சையில் உள்ளனர்.பாதிப்பு எண்ணிக்கை 64 ஆக உயா்ந்துள்ளது.
அதோடு பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகளிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு,அவா்களுக்கு ஏற்பட்டுள்ளது ஒமைக்ரான் வைரஸ்சா? அல்லது டெல்ட்டா வைரஸ்சா? என்றும் ஆய்வு செய்கின்றனா். இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறையினா் தாம்பரம் எம்சிசி கல்லூரி,குரோம்பேட்டை வைஷ்ணவா பெண்கள் கல்லூரிகளிலும் மருத்துவ சோதனைகளில் ஈடுப்பட்டுள்ளனா்.