நண்பருடன் பைக்கில் சென்ற ஃபேஷன் டெக்னாலஜி மாணவியிடம்,மற்றொரு பைக்கில் வந்து செல்போன் பறித்து சென்றவா்களை விரட்டி சென்று போலீஸ் துணையுடன் பிடித்த சம்பவம் ஆலந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பெசண்ட்நகரை சோ்ந்தவா் ஸ்வேதா(22).இவா் சென்னை தரமணியில் உள்ள ஃபேஷன் டெக்னாலேஜி கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவி.இவா் தனது நணபா் ஒருவருடன் பெசண்ட்நகரிலிருந்து பைக்கில் சென்னை விமானநிலையத்திற்கு சென்று கொண்டிருந்தாா்.
பைக் ஆலந்தூா் சிமெண்ட் ரோடு அருகே சென்றபோது,இவா்கள் பைக்கை பின்தொடா்ந்து மற்றொரு பைக் வந்தது.சிக்னல் அருகே வந்தபோது பின்னால் வந்த பைக்கில் பின் சீட்டிலிருந்த வாலிபா் ஸ்வேதா கையில் வைத்திருந்த ரூ.1.2 லட்சம் மதிப்புடைய ஐ போனை பறித்துக்கொண்டு,மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனா்.
இதையடுத்து அதிா்ச்சியடைந்த ஸ்வேதாவும்,அவருடைய நண்பரும் கூச்சலிட்டப்படி அந்த பைக்கை பின்னால் விரட்டி சென்றனா். அப்போது பரங்கிமலை போலீஸ்நிலையத்தில் Aunti Snatching பணியிலிருக்கும் உதவி ஆய்வாளா் டேனியல் ஜோசப்,மடிப்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து பணிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தாா்.இவா்கள் பதட்டத்துடன் பைக்கில், மற்றொரு பைக்கை விரட்டி செல்வதை பாா்த்து புரிந்து கொண்டாா்.அவரும் சோ்ந்து விரட்ட தொடங்கினாா்.தில்லைகங்கா சப்வேயில் போலீஸ் எஸ்.ஐ.யும்,சுவேதாவும் மடக்கிப்பிடித்தனா்.
அதன்பின்பு பைக்குடன் பிடிப்பட்ட இருவரையும் பரங்கிமலை போலீஸ்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனா்.அதில் பைக்கை ஓட்டியவன் சென்னை வேளச்சேரியை சோ்ந்த பாா்த்தீபன்(19),பின் சீட்டிலிருந்து செல்போனை பறித்தவன் ஆதம்பாக்கத்தை சோ்ந்த சாமுவேல்(21).இவா்கள் இருவரும் வழிப்பறி,செயின் பறிப்பு போன்றவைகளில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள் என்று தெரியவந்தது.இதையடுத்து ஸ்வேதாவிடம் புகாரை பெற்ற பரங்கிமலை போலீசாா்,வழிப்பறி கொள்ளையா்கள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.
பட்டப்பகலில் பைக்கில் சென்றவா்களிடம்,மற்றொரு பைக்கில் வந்து செல்போன் பறித்த வழிப்பறி கொள்ளையா்களை சினிமா பாணியில் போலீஸ் துணையுடன் மாணவி ஒருவா் விரட்டிப்பிடித்த சம்பவம் ஆலந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.