பல்லாவரத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு

பல்லாவரத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-07-17 16:00 GMT

பல்லாவரத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம ஆசாமிகள் செல்போனை பறித்துச் செல்லும் சிசிடிவி கேமிரா பதிவு

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மல் நாகல்கேனி பிரதான சாலையில் செளந்தர்யா என்ற பெண் வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் சௌந்தர்யாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சௌந்தர்யா எழுந்து செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட நபர்களை பிடிப்பதற்காக துரத்தி சென்றுள்ளார். ஆனால் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.

உடனே இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துதப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News