சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது -சிறையில் அடைப்பு
சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.;
கைது செய்யப்பட்ட சத்யா.
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(29), இவருடைய தம்பி சத்யா(எ)ஹெட்லைட் சத்யா(20), இவர் மீது பல்வேறு வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி வழக்குகள், பல்லாவரம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
சரித்திர பதிவேடு குற்றவாளியான சத்யா அவரது அண்ணன் முருகேசனை, சொத்து பிரச்சனை காரணமாக, கொலை செய்ய முயன்று கத்தியால் வெட்டியுள்ளார். இதில் அவருக்கு இடது உள்ளங்கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வெட்டிவிட்டு தப்பியோடிய சத்யா என்பவரை பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயால் தலைமையிலான, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.