பல்லாவரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
பல்லாவரம் நகராட்சியில் லஞ்சஒழிப்பு போலீசாரின் சோதனை நிறைவடைந்தது. 11500 ரூபாய் பணம் இடைத்தரகரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.;
சென்னை குரோம்பேட்டையில் உள்ள பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில், ஏ.டி.எஸ்.பி சின்ன ராம் தலைமையில், ஆய்வாளர்கள் அடங்கிய லஞ்ச ஒழிப்பு துறையினர் சுமார் 10க்கும் மேற்பட்டோர் இன்று மாலை, 3 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
நகராட்சியில் அனைத்து பணிகளுக்கும் இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்கப்படுவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனையானது இரவு 10 மணி வரை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது இடைத்தரகர் ஒருவரிடம் இருந்து 11500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது குறித்து விசாரணை நடைபெறும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.