பல்லாவரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
பல்லாவரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.;
சென்னை குரோம்பேட்டையில் உள்ள பல்லாவரம் நகராட்சியில், ஏ.டி.எஸ்.பி சின்ன ராம் தலைமையில் ஆய்வாளர்கள் அடங்கிய லஞ்ச ஒழிப்பு துறையினர் சுமார் 10க்கும் மேற்பட்டோர் 3 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகராட்சியில் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
சோதனையானது முடிவடைந்த பிறகு தான் கைப்பற்றப்பட்ட விவரங்கள் குறித்து தெரியவரும்.