ஆல் இந்தியா யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ்: தலைமை அலுவலகத்தில் ஆயுதபூஜை

ஆல் இந்தியா யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் பத்திரிகையாளர்கள் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2021-10-24 14:30 GMT

ஆல் இந்தியா யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் தலைமை அலுவலகத்தில் ஆயுதபூஜை 

ஆல் இந்தியா யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் தலைமை அலுவலகத்தில், ஆயுதபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 


சென்னை பல்லாவரம் அடுத்த, பழைய பல்லாவரம், சுவாமி மலை நகரில் செயல்பட்டு வரும் ஆல் இந்தியா யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் பத்திரிகையாளர்கள் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா சங்க பொது  செயலாளர் வேளச்சேரி. ச.சாந்த குமார் தலைமையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இதில் அனைத்து காட்சி மற்றும் அச்சு ஊடகத்தை சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். 

பூஜையில் பத்திரிகையாளர்கள் தங்களது கேமரா மற்றும் மைக், லோகோ ஆகியவற்றை வைத்து வழிப்பட்டனர்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களுக்கு பொறி கடலை, பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 

மேலும் நிகழ்வில் சங்க பொருளாளர் த.உதயகுமார், செயலாளர் த.மோனீஸ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் தீனதயாளன், சுமன், ஆதாம், ராஜ்குமார், சரவணன், சுனில் மற்றும் சங்க உறுப்பினர்கள் காதர், முஸ்தபா, சுரேஷ், உமாபதி, ஜெயகர், பாண்டியன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News