சென்னை குரோம்பேட்டையில் பெட்ரோல் பங்க் அருகில் திடீர் தீ விபத்து
சென்னை குரோம்பேட்டையில் பெட்ரோல் பங்க் அருகில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;
சென்னை குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலை ரோடு, தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள பழைய மூடப்பட்ட தோல் தொழிற்சாலையில் புதர் மண்டி இருந்தது.இந்த காலி இடத்தில் சாலையோரம் மீன் வியாபாரம் செய்யும் சிலர் தர்மாகோல் பெட்டியையும் காலி இடத்தில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த இடத்தில் திடீரென பயங்கர தீப்பிடித்து எரிய துவங்கியது. கரும்புகை வெளியேறியதால் வாகன ஓட்டுகளும் அவதியடைந்தனர். பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயணைப்பான் கொண்டு தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை, பின்னர் தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து 40 நிமிடங்களுக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் யாருக்கும் எவ்வித காயமும் இல்லை, தீ விபத்து குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.