போக்குவரத்து கழக 14-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தை துவக்கம்
சென்னை குரோம்பேட்டையில் 14-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் கண்ணப்பன் முன்னிலையில் துவங்கியது.
அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான ஊதியம், பல்வேறு படிகள் மற்றும் சலுகைகள் குறித்த 14-வது ஊதிய ஒப்பந்த மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையானது போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் தற்போது குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நிதித்துறை இணைச் செயலாளர் அருண் சுந்தர் தயாளன், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலாளர் மற்றும் பதிவு செய்யப்பட்ட 65 தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 2019 ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையில் 14வது பேச்சுவார்த்தை துவங்கப்படாமல் இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் நடைபெற வேண்டிய நிலையில் கொரோனா காரணம் காட்டி தாமதமானது. அதன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.
இரண்டாவது பேச்சுவார்த்தையின் போது 1000 ரூபாய் இடைக்கால நிதியாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.