பல்லாவரம், பம்பமல் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்!

பல்லாவரம். பம்பமல்.பகுதியில் தேவையின்றி சுற்றிய 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-05-19 11:02 GMT

சாலையில் தேவையின்றி சுற்றிய வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார்

தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக  முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி, இறைச்சி கடைகள் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டது. கடைகளுக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லாமல் நடந்து சென்று தான் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினார்கள்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய பல்லாவரம் பேருந்து நிலைய ஜி.எஸ்.டி சாலையில் மற்றும் பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தேவையின்றி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றுவதாக பல்லாவரம். பம்மல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே 30க்கும் மேற்பட்ட போலீசார் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே மற்றும் பம்மல் நகராட்சி அருகே திடீரென அப்பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுப்பட்டனர். அப்போது அத்தியாவசிய தேவைகள் இன்றி சுற்றி 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்த அவர்களது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தபோது அங்கு வாகன ஓட்டிகள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் இல்லாமல் நின்றதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

Tags:    

Similar News