சினிமா தொழில் நுட்பம் பற்றி 10 மணி நேரம் பேசி, உதவி பேராசிரியை உலக சாதனை
பல்லாவரம் வேல்ஸ் கல்லூரியில் சினிமா தொழில் நுட்பம் பற்றி தொடந்து 10 மணி நேரம் பேசி, உதவி பேராசிரியை சித்ராமை உலக சாதனை படைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ளது வேல்ஸ் கல்வி நிறுவனம் இதில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றுபவர் முனைவர். சித்ராமை.
காலை 8:10 முதல் மாலை 6:10 மணி வரை உலகில் முதன் முறையாக உலக சினிமா, இந்தி சினிமா, மற்றும் தமிழ் சினிமாவில் சுமார் 115 ஆண்டுகளாக பயன்படுத்தபட்ட வரும் தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து 10 மணி நேரம் பேசி சாதனை படைத்தார். இந்த உலக சாதனையினை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அங்கிகரித்து சான்றிதழ் வழங்கினார்.
நிறுவன தலைமை செயலாளர் கார்த்திக் குமார் பதக்கம் அணிவித்தார். தலைமை நிர்வாகி செயலாளர் செல்வம் உமா இந்த நிகழ்ச்சியை ஆய்வு செய்தார்.
நிறுவன நிர்வாகிகள் ஸ்டீபன் சீனுவாசன் சாலமன் தினேஷ் ஆகியோர் பரிசு உபகரணங்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் நடிகர் பாண்டியராஜன், துணைத் தலைவர் ஜோதிமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் பத்ம பிரியா யுவராஜ், திரைப்பட தாயாரிப்பாளர் வெள்ளை சேது மற்றும் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகிகள் ஹரிஹரன், இலக்கியா, சஞ்சய், ஐஸ்வர்யா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்