மதுராந்தகத்தில் எஎம்எம்கேவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மதுராந்தகம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
மதுராந்தகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர கழக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை கே.சி.சரவணன் தலைமையில் அண்ணா திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இதில் மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் செயலாளர் எஸ்.எ.குமார், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளபுத்தூர் சி.முனுசாமி, கருங்குழி பேரூராட்சி செயலாளர் ஆர்.டி.முருகதாஸ், உள்ளிட்ட நகர கழக நிர்வாகிகள், உருப்பினர்கள் திரளானோர் கொண்டனர்.