பொங்கல் திருநாளை முன்னிட்டு 500 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்
பொங்கல் திருநாளை முன்னிட்டு 500 குடும்பத்தினருக்கு சமூக ஆர்வலர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தேன்னேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ரகு. இவர் தேன்னேரிபட்டு, கல்பட்டு உள்ளிட்ட கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 500 பேருக்கு அரிசி, வேட்டி, சேலை, காய்கறி, உள்பட குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக சித்தாமூர் ஒன்றிய பொறுப்பாளர் சிற்றரசு மற்றும் புத்திரன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நிர்மல்குமார் மற்றும் புகழேந்தி ஆகியோர் தலைமையில் அனைத்து குடும்பத்திற்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.