வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்களுக்கு தண்ணீர் உணவு கட் பரபரப்பு

அச்சிறுப்பாக்கம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தண்ணீர் உணவு வழங்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-12 02:45 GMT

அச்சிறுபாக்கம் வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசிதிகள் இன்றி தவிக்கும் தேர்தல் பணியாளர்கள்.

செல்லப்பட்டு மாவட்டத்தில் நடந்த முடிந்த 8 ஊராட்சி ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அச்சிறுப்பாக்கம் அரசினர் பெண்கள் பள்ளியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு இன்று காலை 6 மணிக்கு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.இவர்களுக்கு இதுவரையில் இரண்டு மணி நேரங்கள் ஆகியும் உணவு தண்ணீர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தற்போது வாக்கு எண்ணிக்கை துவங்கி உள்ளதால் அனைவரும் பசியோடு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வாக்கு எண்ணிக்கையை துவங்கியுள்ளனர்.

மேலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.  மாவட்ட தேர்தல் அலுவலர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News