மதுராந்தகம்: கலெக்டர் கொடுத்த பட்டாவுக்கு தடைபோட்ட கிராம நிர்வாக அலுவலர்
மதுராந்தகம் அருகே கலெக்டர் கொடுத்த பட்டா நிலத்தில் கூரை வீடு அமைக்கும் பணியை, கிராம நிர்வாக அதிகாரி தடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில் தமிழக அரசால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் வீடு கட்ட வேண்டாம் என வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இருவரும் வீடு கட்டுவது செல்லாது என தடுத்து நிறுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் அருகே உள்ள எடையாளம் கிராமத்தில் வசிப்பவர் குமார் இவரது மனைவி செங்கேனி அம்மாள் இவர்கள் மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 1997 ஆம் ஆண்டு 162 B/1 இடத்திற்கு 2.5 சென்ட் பட்டா வழங்கப்பட்டது.
இந்த நிலத்தை செங்கேனி கடந்த 25 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார். தற்போது பழைய கூரை வீட்டை பிரித்துவிட்டு புதியதாக கூரைக் வீடு சீரமைக்கும் பணியில் ஈடுபடும் போது அச்சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் ருக்மணி உத்தரவின் பேரில் எடையாளம் கிராம நிர்வாக அலுவலர் கோபி வீடு கட்டும் செங்கேனியிடம் தகராறில் ஈடுபட்டு வீடு கட்டும் பணியை நிறுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயனாளி ஏன் எதற்கு என்று கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது பதிலேதும் கூறாமல் உன் மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டும் தொனியில் பேசி உள்ளார். இது அப்பகுதி மக்களிடையே சற்று சலசலப்பு நிலவியது.