அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.;

Update: 2021-04-21 17:00 GMT

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, அச்சிறுபாக்கம் சுகாதார நிலையம் மற்றும் அச்சிறுபாக்கம் மலைநகரம் சங்கம் இணைந்து நடத்திய கொரோனா வைரஸ் தடுப்பு தடுப்பூசி போடும் முகாம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் நடத்தப்பட்டது.

இதில் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன், லயன்ஸ் சங்க தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர்.

மருத்துவ அலுவலர் ரேகா தலைமையிலான மருத்துவ குழுவினர் 42 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன், லயன்ஸ் சங்க சேவை தலைவர் தனசேகரன் மற்றும் பேரூராட்சி அலுவலக எழுத்தர் சக்திகுமார், வழக்கறிஞர் டி.ஜி.மனோகர், சட்ட உரிமைகள் கழகம் பருக்கல் விவேகானந்தன், சமூக ஆர்வலர் ம.நீலமேகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News