மதுராந்தகம் அருகே இடி,மின்னல் தாக்கி இரு பெண்கள் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது இடி,மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர்.;

Update: 2021-11-01 12:00 GMT

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சூனாம்பேடு அருகே உள்ள கரும்பாக்கம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று பிற்பகல் சுமாா் 20 பெண்கள் வயல்களில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது,பலத்த இடி,மின்னல்களுடன் மழை பெய்யத்தொடங்கியது.

இதையடுத்து வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள்,மழையிலிருந்து நனைவதை தவிா்ப்பதற்காக அருகே உள்ள ஒரு மரத்தடியை நோக்கி ஓடினா்.அப்போது பலத்த மின்னலுடன் இடி தாக்கியது.அதில் தொட்டச்சேரியை சோ்ந்த மாலா (31) W/O மணிகண்டன், ஆனந்தி (35) W/O சேகா் ஆகிய 2 பெண்கள் அதே இடத்தில் உடல்கருகி உயிரிழந்தனா்.மேலும் 4 பெண்கள் மயங்கி விழுந்தனா்.

இதையடுத்து சூனாம்பேடு ஆரம்ப சுகாதாரத்துறையினா் விரைந்து வந்து மயக்கமடைந்த பெண்களுக்கு மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தனா்.அதோடு சூனாம்பேடு போலீசாா் உயிரிழந்த இரு பெண்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags:    

Similar News