தியாகி இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபப் பணிகள்: துரிதப்படுத்த கோரிக்கை

தியாகி இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் கட்ட கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது

Update: 2021-08-24 05:00 GMT

 சென்னை அச்சிறுபாக்கம் அருகே பாதியில் நிற்கும் தியாகி இரட்டைமலை சீனிவாசன்  மணிமண்டபம் 

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே ஓராண்டுகாலமாக கட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள தியாகி இரட்டைமலை சீனிவாசன்  மணிமண்டப பணிகளை, விரைந்து முடிக்க வேண்டுமென  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே தியாகி இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் கட்ட கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, மலை சூழ்ந்த பகுதியான அச்சிறுபாக்கம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, மணிமண்டபம் கட்டும் பணிகள் துவங்கின.  ஆனால், போதுமான நிதி ஒதுக்காத காரணத்தால்  மணிமண்டப கட்டுமானப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே,  தமிழக அரசு உடனடி கவனம் செலுத்தி மணிமண்டபத்தை கட்டிமுடித்து திறக்க   நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News