கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய டாஸ்மாக் கடைக்கு ரூ.5ஆயிரம் அபராதம்

மதுராந்தகத்தில் கொரொனா கட்டுப்பாடுகளை மீறிய டாஸ்மாக் கடைக்கு ரூ,5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2021-05-08 16:15 GMT

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட 'குடிமகன்கள்'

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் தள்ளு முள்ளுடன் அலைமோதும் குடிமக்கள் கூட்டம் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு 14 நாட்கள் நீட்டிக்கப்படுவதால் மதுராந்தகத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் இன்று மது பிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி இல்லாமலும் முககவசம் இல்லாமலும் முட்டி மோதி தள்ளுமுள்ளுடன் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

இன்றும் நாளையும் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரு நாட்களுக்கு அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என அரசு அறிவித்துள்ளது.  அதனால்  மதுபாட்டில்களை பெருமளவில் வாங்கி செல்கின்றனர். 

இதனையடுத்து மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் அரசு மதுபான கடையில் வாடிக்கையாளர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் ரூபாய் 5000 அபராதம் விதித்தனர்

Tags:    

Similar News