பூர்வீக சொத்தை ஏமாற்றிய கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்
பூர்வீக சொத்தை ஏமாற்றிய கிராம நிர்வாக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கோழியாளம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் இவருடைய பூர்வீக சொத்து அதே கிராமத்தில் 69 சென்ட் நிலம் உள்ளது.
அந்த இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் தவறுதலாக சென்னையை சேர்ந்த பிரதீப்ராஜ் என்பவருக்கு 2012 ,ல் கிரையம் செய்து கொடுத்துள்ளார்.
அந்த இடத்தை பூர்வீக சொத்து உரிமையாளர் சம்பத் என்பவர் விற்பனை செய்ய முயன்ற போது அந்த இடம் ஏற்கனவே விற்பனை செய்து இருப்பதாக பதிவு துறையில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதே கிராமத்தை சேர்ந்த மோகன் பட்டா மாற்றம் தவறுதலாக வந்துவிட்டதால் விற்பனை செய்து விட்டேன் ஆகவே அதர்க்கு உண்டான பணத்தை திருப்பி தருவதாக கூறினார்.
ஆனால் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று நாளை என அலைகழித்து வருவதாக கூறுகின்றனர். மேலும் வருவாய் துறையில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருவதால் பணம் கொடுக்க முடியாது உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக மதுராந்தகம் வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று, மதுராந்தகம் வட்டாச்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.