அச்சிறுப்பாக்கத்தில் விவசாய மின் இணைப்பு திருத்த சிறப்பு முகாம்

அச்சிறுபாக்கத்தில் விவசாய மின் இணைப்பு திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது.;

Update: 2022-01-03 07:15 GMT

அச்சிறுபாக்கத்தில் விவசாய மின் இணைப்பு திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் கோட்டத்தில் செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் இரா.மணிமாறன் அறிவுறுத்தலின்படி இன்று செயற்பொறியாளர் அலுவலகம் அச்சிறுபாக்கத்தில் 01.04.2003 முதல் 31.3.2013 வரை விண்ணபித்துள்ள விவசாய மின் இணைப்பிற்கு பதிவு செய்துள்ள பழைய விண்ணப்பதாரர்கள் பெயர் மாற்றம், சர்வே எண் உட்பிரிவு மாற்றம், சர்வே எண் மாற்றம் ஆகியவைகளை மாற்றம் செய்து கொடுக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் விவசாய மின் நுகர்வோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும், பெயர் மாற்றத்திற்கு இறப்பு சான்று, வாரிசு சான்று, பங்குதாரர்களின் சம்மத கடிதம், கிராம நிர்வாக அலுவலரின் சான்று கொண்டு வந்தனர். சர்வே எண் உட்பிரிவு மாற்றத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று, வரைபடம், சர்வே எண், மற்றும் கிணறு மாற்றத்திற்கு பழைய புதிய கிராம நிர்வாக அலுவலர் சான்று, வரைபடம் ஆகியவைகளை அலுவலகத்திற்கு கொண்டு வந்து தகவல் பெற்று கொண்டனர்.

மேலும் இம்முகாமில், பெரும்பேர்கண்டிகை, மின்னல்சித்தாமூர், தொழுப்பேடு, கடமலைபுத்தூர், நுகும்பல், சூனாம்பேடு, சிறுமைலூர், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். உதவி செயற்பொறியாளர்கள் மகேஸ்வரன் துரைராஜ் தனசேகர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் தேவநாதன் வணிக ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் அச்சிறுப்பாக்கம் கோட்ட செயற்பொறியாளர் கு. கிறிஸ்டோபர் லியோராஜ். விவசாயிகளுக்கு சாதாரண மின் திட்டத்தின் கீழ் செயல்படும் குறிப்புகளை விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

Tags:    

Similar News