சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா

Update: 2021-03-29 06:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த எலப்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 33ஆம் ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்றது.

மதுராந்தகம் அருகே எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 33ஆம் ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். கோவில் கும்பாபிஷேகத்திற்காக பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடப்பதால், பக்தர்கள் பால்காவடி எடுத்து வழிபட்டனர். இருப்பினும், வழக்கமான நான்கு கால பூஜைகள், உச்சி கால சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பக்தர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையான, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். கோயில் ஊழியர்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றினர். தரிசனம் முடித்து பக்தர்களுக்கு, விபூதி, உதிரிபுஷ்பம், சர்க்கரை, வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News