மழையில் பாதிக்கப்பட்ட குடிசை வாழ் மக்களுக்கு நிவாரண உதவி : திமுக வழங்கல்

காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் மழையில் பாதிக்கப்பட்ட குடிசை வாழ் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Update: 2021-11-09 04:15 GMT

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொழுப்பேடு ஊராட்சியில் போலமாகுளம் குடிசைவாழ் பகுதி மக்களுக்கு திமுகவினர்  நல திட்ட  உதவிகள் வழங்கினர்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட தொழுப்பேடு ஊராட்சியில் அடங்கிய போலாமா குளம் குடிசைவாழ் மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆலோசனைப்படி காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் முன்னிலையில் 14 வார்டு ஒன்றிய கவுன்சிலர் பொன்மலர் சிவகுமார் தலைமையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழையால் பாதிக்கப்பட்ட போலாமாகுளம் குடிசைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து சுமார் 25 ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் குடிசைவாழ் பகுதி மக்களுக்கு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து இலவச பட்டா வீட்டுமனை வழங்குவதற்கான மனுவினை கிராம நிர்வாக அலுவலரிடம் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் வழங்கினார்.

அப்போது கழக பொறுப்பாளர்கள் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஒரத்தி கே.கண்ணன், மாவட்ட பொருளாளர் கோகுலகண்ணன், 13-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பார்த்தசாரதி, ஒன்றிய அவைத்தலைவர் வீரராகவன், ஒன்றிய துணை செயலாளர் பேக்கரிரமேஷ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுந்தரவரதன், மற்றும் தொழுப்பேடுஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம், உள்ளிட்ட  நிர்வாகிகள் இருந்தனர்.

Tags:    

Similar News