மதுராந்தகம் அருகே கோவில் நகைகளை மீட்கக்கோரி காவல்நிலையம் முற்றுகை

மதுராந்தகம் அருகே கோவில் நகைகளை மீட்டுத்தர வலியுறுத்தி பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-08-20 10:15 GMT

கோயில் நகைகளை மீட்கக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள பழையனூர்சாலை கிராமத்தில் உள்ள துலுக்காணத்தம்மன் கோவிலில் கடந்த ஓராண்டுக்கு முன் அம்மன் நகைகள் 9 சவரன் மற்றும் பூஜை பொருட்கள் திருடுபோனது.

இந்த திருட்டு சம்பந்தமாக படாளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சுமார் ஓராண்டு ஆகியும் இதுவரை காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அம்மன் நகைகளை மீட்கவும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் படாளம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், 15 நாட்களுக்குள் நகையை மீட்டு ஒப்படைக்கிறோம் என போலீசார் கால அவகாசம் கேட்டதால் மக்கள் அங்கிரு கலைந்து சென்றனர்.

மேலும்,15 நாட்களுக்குள் நகை மீட்டு கொடுக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையாக அடுத்த மாதம் செப்டம்பர் 6ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News